மலேசியாவிற்கு வருகைப் புரியும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளிடம் அதிக கட்டணம் விதிப்பது நாட்டின் தோற்றத்தை வெகுவாக பாதிக்கச் செய்துவிடும் என்று உள்நாட்டு மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் சலாஹூடி அயோப் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர், புகீட் பிந்தாங்கில் முடித்திருத்தும் நிலையம் ஒன்றில், இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுப்பயணி ஒருவருக்கு முடித்திருத்துவதற்கு 120 வெள்ளி கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து கருத்துரைக்கையில், அமைச்சர் இதனை தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இச்சம்பவம் குறித்து, தமது அமைச்சின் அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்வர் என்று சலாஹூடி அயோப் உறுதியளித்தார்.
அந்த இங்கிலாந்து சுற்றுப்பயணி தெரிவித்துள்ள புகார் அடிப்படையில், விசாரணை செய்யப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், முடித்திருத்துவதற்கு 50 வெள்ளிக்கு மேல் கட்டணம் விதிக்கப்படுவது ஏற்புடையது அல்ல என்று தெளிவுப்படுத்தினார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


