Jun 29, 2026
Thisaigal NewsYouTube
கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி
தற்போதைய செய்திகள்

கோத்தா டாமன்சாராவில் தீ விபத்து: இரண்டு மாடி வீட்டில் சிக்கி 54 வயது நபர் பலி

Share:

சிலாங்கூர், கோத்தா டாமன்சாராவில் ஜாலான் கென்யாலங் 11/6B -கில் அமைந்துள்ள இரண்டு மாடி இரட்டை வீட்டில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 54 வயதுடைய உள்ளூர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

காலை 9.09 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, மீட்புக் குழுவினர் விரைந்து செயல்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, வீட்டின் சுமார் 40 சதவீதப் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டிருந்தது என்று சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

வீட்டின் மேல் தளத்தில் உள்ள வராண்டா பகுதியில் சுயநினைவின்றி இருந்த நபர் 9.30 மணியளவில் மீட்கப்பட்டார். இருப்பினும், காலை 11.15 மணியளவில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காகப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்துப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு