Oct 7, 2026
Thisaigal NewsYouTube

குவாந்தான் மாணவி மரணம் – விசாரணையில் உடனடி நடவடிக்கை தேவை: ஸம்ரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குவாந்தான் மாணவி மரணம் – விசாரணையில் உடனடி நடவடிக்கை தேவை: ஸம்ரி

குவாந்தானில் 19 வயது கல்லூரி மாணவி கழுத்து நெரிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான போலீஸ் விசாரணையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் வலியுறுத்தியுள்ளார்.

காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அந்த மாணவி கழுத்து நெரிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் மாணவியின் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது போலீஸ் துறையின் விசாரணையில் இருப்பதாகவும், சம்பவம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் முக்கியம் என்றும் ஸம்ரி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →