Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் ஆய்வாளர் உட்பட அறுவர் கைது
தற்போதைய செய்திகள்

அரசியல் ஆய்வாளர் உட்பட அறுவர் கைது

Share:

கோலாலம்பூர், செராஸ், தாமான் மிடாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் ஓர் அரசியல் ஆய்வாளர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

30 க்கும் 40 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆறு பேரும் நேற்று இரவு 9 மணியளவில் செராஸ் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு தகவல் தொடர்பில் ஏற்பட்ட அதிருப்தியினால் நாற்காலியினால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News