Oct 4, 2026
Thisaigal NewsYouTube

டிஎன்பி கேபிள் திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிஎன்பி கேபிள் திருட முயன்றவர் மின்சாரம் தாக்கி பலி

காப்பார், ஜாலான் யாக்கோப் பகுதியில் இன்று காலை டிஎன்பி கேபிளைத் திருட முயன்றதாக நம்பப்படும் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

காலை சுமார் 10 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார், கேபிளுடன் அவரது கை ஒட்டிய நிலையில் சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும், அங்கு கேபிள் வெட்டும் கருவிகள் மற்றும் அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டன.

காப்பாரைச் சேர்ந்த அந்த நபரை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக யுஐடிஎம் புஞ்சாக் ஆலாம், சுல்தான் அல்-அப்துல்லா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →