Oct 16, 2026
Thisaigal NewsYouTube

காஜாங்கில் பெண் கடத்தப்பட்டாரா? இல்லை என்கிறது போலீஸ்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காஜாங்கில் பெண் கடத்தப்பட்டாரா? இல்லை என்கிறது போலீஸ்

காஜாங், டிச.6-


காஜாங், ஜாலான் ஸம்ருட் உத்தாமாவில் உள்ள ஒரு கொண்டோமினியம் வீட்டின் நுழைவாயிலில் பெண் ஒருவர், இரண்டு ஆடவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக கூறி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் காணொளியில் கூறப்படும் தகவல் உண்மை அல்ல என்று காஜாங் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

நேற்று காஜாங் வட்டாரத்தில் அப்படி எந்தவொரு சம்பவமும் நிகழவில்லை என்றும், அது தொடர்பாக போலீசார் எந்தவொரு புகாரையும் பெறவில்லை என்றும் காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்.

பெல்லாடாஹியாடிலிஷா என்ற டிக் டோக் கணக்கின் மூலம் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →