May 21, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் எக்ஸ்பிரஸ் பேருந்து கவிழ்ந்தது
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் எக்ஸ்பிரஸ் பேருந்து கவிழ்ந்தது

Share:

குளுவாங், வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து தரையிறங்கிய போது கவிழ்ந்ததில் பஸ் ஓட்டுநர் மற்றும் 36 பயணிகள் உயிர்தப்பினர்.

இன்று அதிகாலை 3.54 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக ரெங்காம் தீயணைப்பு, மீட்பு படையின் தலைவர் அப்துல் ரஹிம் ரசாலி தெரிவித்தார்.

பேருந்திற்குள் சிக்கிய மூன்று பாதிக்கப்பட்டவர்களை தீயணைப்பு வீரர்களின் உதவியோடு மீட்டதாகவும் மற்ற பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அப்துல் ரஹிம் கூறினார்.
விபத்தில் காயம் ஏற்பட்ட சில பயணிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் அவர் விவரித்தார்.

Related News