மலாக்கா, ஜூலை.30-
ஷாபு வகை போதைப்பொருளை உட்கொண்டதாக மலாக்காவில் பொது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவர் மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
44 வயது முகமட் ஷாரிஸான் ஒத்மான் என்ற மூத்த விரிவுரையாளர் மாஜிஸ்திரேட் ஷார்டா ஷியேன்ஹா முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மாலை 5.20 மணியளவில் மலாக்கா தெங்கா மாவட்ட போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவினரால் அந்த விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.








