Aug 16, 2026
Thisaigal NewsYouTube
டுங்குனில் காட்டுயானை அட்டகாசம்: விவசாயிக்கு 20 ஆயிரம் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

டுங்குனில் காட்டுயானை அட்டகாசம்: விவசாயிக்கு 20 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

Share:

டுங்குன் கம்போங் கோலா ஜெங்காய் பகுதியில் காட்டுயானை ஒன்று தென்னைத் தோட்டத்திற்குள் புகுந்து, காய்க்கத் தொடங்கிய 34 தென்னை மரங்களை சேதப்படுத்தியதால், விவசாயி மொஹ்ட் மர்சூகி சாத்க்கு சுமார் 20,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2.4 ஹெக்டேர் பரப்பளவில் 450 தென்னை மரங்களை வளர்த்து வரும் மார்சுகி, தென்னை சாகுபடியைத் தொடங்கிய பிறகு இது போன்ற சம்பவம் முதன்முறையாக நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த யானையானது தோட்டத்தைச் சுற்றியிருந்த மின்வேலியை உடைத்துவிட்டு உள்ளே நுழைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து திராங்கானு மாநில வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காங்கள் துறையான பெர்கிலிடான்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து வந்ததாக நம்பப்படும் அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Related News