Jul 31, 2026
Thisaigal NewsYouTube
மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் 5,000 வேலை வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் 5,000 வேலை வாய்ப்பு

Share:

இன்று தொடங்கி 3 நாட்களுக்கு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் நடந்து கொண்டிருக்கும் மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் வேலை வாய்ப்பு முகாம்கள் வாயிலக 5,000 க்கும் மேலான வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.

பிரதமர் துறையின் செயல்திறன் ஒருங்கிணைப்பு பிரிவின் செயல் இயக்குநர் அஹ்மத் ஜெப்ரி அஜீஸ் குறிப்பிடுகயில், 63 தனியார் நிறுவனங்கள், சமூக பாதுகாப்பு அமைப்பான சோக்சோ, பொதுச் சேவை ஆணையம் ஆகியன கலந்து கொள்தாகவும் கூறினார்.

வேலை வாய்ப்புகளைத் தவிர்த்து, துபாய், இஸ்தான்புல் போன்ற நாடுகளுக்கு வான் பயணச் சீட்டுகள் உட்பட பல பரிசுகள் அதிர்ஷ்ட குலுக்கு வாயிலாக வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையில், மடானி அரசாங்கத்தின் ஓராண்டு நிரைவு விழாவில், ஒவ்வொரு அமைச்சும் முன்னெடுத்துச் செல்லும் திட்டங்கள் மூலம் மக்களை ஈர்ப்பதற்காக மட்டுமல்லாமல், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தவும் ஒரு தளமாக அமைகிறது என ஜெஃப்ரி சொன்னார்.

காலை 9.00 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சி இரவு 10.00 மணி வரை நீடிக்கும் என அவர் மேலும் சொன்னார்.

இந்த நிகழ்ச்சியின் உச்சகட்டமாக பிரதமர் அன்வார் இபுராகிம் கலந்து கொள்வார்.

Related News