Nov 16, 2025
Thisaigal NewsYouTube
அவசர எச்சரிக்கை: ASGG Gluta Genc Glow Gummies தடை! விற்பனை செய்தால் அபராதம்
தற்போதைய செய்திகள்

அவசர எச்சரிக்கை: ASGG Gluta Genc Glow Gummies தடை! விற்பனை செய்தால் அபராதம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.16-

ASGG Gluta Genc Glow Gummies என்ற உணவுப் பொருளுக்கு அதன் விற்பனையையும் விளம்பரத்தையும் உடனடியாகத் தடை செய்வதாக இன்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்தப் பொருளில் Glutathione என்ற பொருள் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இஃது உணவுப் பொருட்கள் விதிமுறைகள், 1985-ன் கீழ் அனுமதிக்கப்பட்ட ஊட்டச்சத்துப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்தப் பொருளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உடனடியாக நிறுத்திவிட்டு, சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இந்தத் தடையை மீறிப் பொருளை விற்பனை செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு 100 ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Related News