கோலாலம்பூர், அக்டோபர்,31-
தமக்கும் அரசப் பேராளரர் ஒருவருக்கும் இடையில் திருமணம் நடந்ததைப் போல ஒரு போலியான திருமணச் சான்றிதழை டிக் டாக் தளத்தில் பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக மாது ஒருவருக்கு கோலாலாம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வந்த 43 வயது பெர்சானா அவ்ரில் சொலுண்டா என்ற அந்த மாது, இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுஹைலா ஹரோன் தண்டனை விதித்தார்.
கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி King.charles.ratu என்ற டிக் டாக் கணக்கில் தமக்கும் அரசப் பேராளர் ஒருவருக்கும் திருமணம் என்ற போர்வையில் போலியான திருமணப் பதிவுச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ததாக அந்த மாது மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.








