மக்களுக்கு எப்போதும் போதுமான அரிசி விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உள்நாட்டு அரிசி விநியோகப் பிரச்னையை தீர்ப்பதற்கு அரசாங்கம் கொண்டுள்ள பிரதான திட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டார்.
உள்நாட்டு அரிசி உற்பத்தி கடந்த 2021 ஆம் ஆண்டு 16 லட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது. அது கடந்த ஆண்டு 15 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக சரிவு கண்டுள்ளது.
இந்நிலையில் மக்களுக்கு போதுமான அரிசி விநியோகம் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எத்தகைய திட்டத்தை கொண்டுள்ளது என்பதை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


