Oct 11, 2026
Thisaigal NewsYouTube

அமைச்சுப் பணிக்கு திரும்பினார் ரபிஃஸி ரம்லி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அமைச்சுப் பணிக்கு திரும்பினார் ரபிஃஸி ரம்லி

புத்ராஜெயா, மே.06-

நீண்ட நாள் விடுப்பில் இருந்த பொருளாதார அமைச்சர் ரபிஃஸி ரம்லி, இன்று தனது அமைச்சுப் பணிக்குத் திரும்பியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதுநாள் வரை ரபிஃஸி ரம்லி எடுத்துள்ள விடுமுறைக்கு அவர் விளக்கம் தந்தாரா? இல்லையா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதுமில்லை.

கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தல் முடிவில் அதிருப்தியுற்ற ரபிஃஸி, அக்கட்சியில் தாம் வகித்து வரும் துணைத் தலைவர் பதவிலிருந்து விலகக் போவதாக தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிகேஆர் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகும் அதே வேளையில் தாம் வகித்து வரும் பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்தும் ரபிஃஸி விலக நோக்கம் கொண்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், அவர் இன்று காலையில் அமைச்சுப் பணிக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →