விஷப்பாம்பு தீண்டியிருக்கலாம் என்று நம்பப்படும் ரப்பர் பால்மர வெட்டுத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். சுயநினைவு இழந்த நிலையில் கிடந்த அந்த தொழிலாளி குறித்து பொது மக்கள் போலீசுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து சபா, கெனிங்காவ், கிராமம் புனாங் உலு சூக் என்ற இடத்தில் 36 வயதுடைய அந்த தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டதாக கேனிங்கவ் மாவட்ட போலீஸ் தலைவர் ரஃபிதா காசிம் அல்ல தெரிவித்தார். ரப்பர் பால் மர நிரையில் அந்த தொழிலாளி கிடந்ததாகவும், அருகில் புல்வெட்டும் இயந்திரம் ஒன்று காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த தொழிலாளியின் உடலில் விஷ பாம்பு தீண்டியதற்கான அடையாளங்கள் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Related News

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு


