Oct 9, 2026
Thisaigal NewsYouTube

அந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்யப்படும்

கோத்தா கினபாலு, ஜூன்.23-

சபா, கோத்தா கினபாலுவில் நேற்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான பேரணி ஒன்றில், பிரதமரின் உருவப்படத்தை எரித்த சில நபர்களின் நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த பேரணியில் சபா மலேசிய பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பொது இடத்தில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைச் சுற்றுப்பயணிகளும் நேரில் பார்த்துள்ளனர் என்று சபா போலீஸ் தலைவர் ஜௌதே டிகும் தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவுற்றதும், மேல் நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →