Oct 17, 2026
Thisaigal NewsYouTube

எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை

கோலாலம்பூர், நவ.13-


கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, ஓ.யு.ஜி. கார்டனில் உள்ள ஒரு வீட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு, ஐஸ் பெட்டிலியிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மூதாட்டி காணாதது குறித்து தாங்கள் எந்தவொரு போலீஸ் புகாரையும் பெறவில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி இசா தெரிவித்தார்.

தனது தாயாரை கொன்று அவரின் உடலை வீட்டின் ஐஸ் பெட்டியில் வைத்திருந்த அந்த மூதாட்டியின் 53 வயது மகன் கைது செய்யப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட மூதாட்டி கடந்த மூன்று ஆண்டுகளாக காணாதது குறித்து அவரின் நெருங்கிய உறவினர்களிடமிருந்து எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று தரவுகள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அந்த மூதாட்டியின் மகன். இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு , வரும் நபம்வர் 19 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கான நீதிமன்ற ஆணையை போலீசார் பெற்றுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட நபர், மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →