கோலாலம்பூர், அக்டோபர்.27-
கோலாலம்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, நாளை செவ்வாய்க்கிழமை நிறைவு பெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் 2,800 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் செய்திகளை நேரடியாகப் பதிவு செய்துள்ளனர்.
மாநாடு நடைபெற்று வரும் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் முகாமிட்டு ஊடகவியலாளர்கள் உடனுக்கு உடன் செய்தி அனுப்பும் நிலையில் மாநாட்டுச் செய்திகளைச் சுடசுடத் தந்து கொண்டு இருந்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன.
செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி கேமராமேன்கள் என்று பெரிய பட்டாளத்துடன் காணப்பட்ட ஊடகவியலாளர்கள், காலை 7 மணி முதல் செய்திகளை நேரடியாக அஞ்சல் செய்து கொண்டு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.








