May 4, 2026
Thisaigal NewsYouTube
வார இறுதியில் WCE நெடுஞ்சாலையில் தினசரி 160,000 வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

வார இறுதியில் WCE நெடுஞ்சாலையில் தினசரி 160,000 வாகனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.20-

சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பிறகு மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதால், தைப்பிங்கையும், பந்திங்கையும் இணைக்கும் மேற்குக் கரையோர விரைவுச்சாலையான WCE நெடுஞ்சாலையில் தினசரி போக்குவரத்து நெரிசல் இந்த வார இறுதியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வாகனங்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு மக்கள் மீண்டும் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிக்குத் திரும்புவதாலும், பள்ளி விடுமுறை முடிவடைவதாலும், ரமலான் மாதத்தின் வருகையாலும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போக்குவரத்து உச்சத்தில் இருக்கும் என்று WCE தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கோலாலம்பூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிச் செல்லும் பாதைகளில், பிற்பகல் முதல் நள்ளிரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

"பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில் மக்கள் படிப்படியாக வெளியேறியதைப் போலன்றி, ரமலான் தொடங்யிருப்பதால் மக்கள் விரைவாக தங்கள் அன்றாட வழக்கத்திற்குத் திரும்ப வேண்டியுள்ளது.

இதனால் இந்த முறை திரும்புவதற்கான பயணம் மிகவும் நெரிசலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று West Coast Expressway எனும் WCE தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News