Oct 17, 2026
Thisaigal NewsYouTube

லோரியில் மோதப்பட்ட புலி இறந்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரியில் மோதப்பட்ட புலி இறந்தது

நவ.9-

தீத்திவங்சா மலைத்தொடரில் பேரா கிரீக் – கிளந்தான் ஜெலி மேற்கு நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் லோரியினால் மோதப்பட்ட புலி ஒன்று உயிரிழந்ததது.

வனப்பகுதி நிறைந்த அப்பகுதியில் சாலையை கடக்கும் போது அந்த புலி அடிப்பட்டு இருக்கலாம் என்ற நம்பப்படுகிறது. அந்த புலி உயிரிழந்தது குறித்து வன விலங்கு மற்றும் தேசியப் பூங்காவான பெர்ஹிலித்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கைப்பற்றப்பட்ட அந்த புலியின் உடலை தாங்கள் சோதனை செய்ததில் அந்தப் புலி உயிரிழந்தப் பின்னர் சில பொறுப்பற்ற நபர்கள் அந்தப் வரிப்புலியின் உடல் அவயங்கள் சிலவற்றை கத்தியால் வெட்டி, திருடிச் சென்றுள்ளனர் என்று பேரா மாநில பெர்ஹிலித்தான் இயக்குநர் யூசோப் ஷாரிப் தெரிவித்தார்.

அந்தப் புலியின் உடலிருந்து தோலை உரித்துள்ளனர். அதன் கோரைப்பற்களை பிடுங்கியுள்ளனர். எலும்புகளை அகற்றியுள்ளனர். அதன் மீசையை வெட்டி எடுத்துள்ளனர் என்று யூசோப் ஷாரிப் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பெர்ஹிலித்தான் ஒரு போலீஸ் புகாரை தாங்கள் செய்துள்ளதாகவும் அவர் தெரிிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →