May 20, 2026
Thisaigal NewsYouTube
முற்போக்கு சம்பள முறைக்கு மேலவை அங்கீகாரம்
தற்போதைய செய்திகள்

முற்போக்கு சம்பள முறைக்கு மேலவை அங்கீகாரம்

Share:

அடுத்த ஆண்டில் நாட்டில் அமல்படுத்தப்படவிருக்கும் முற்போக்கு சம்பளக் கொள்கை பரிந்துரை மீதான வெள்ளை அறிக்கைக்கு குரல் வாக்களிப்பின் மூலம் நாடாளுமன்ற மேலவை இன்று அங்கீகாரம் வழங்கியது.

இந்த உத்தேச பரிந்துரை மீதான விவாதத்தில் மக்களவையில் 18 எம்.பி.க்கள் பங்கேற்றப்பின்னர் இந்த பரிந்துரை அங்கீகாரத்திற்காக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி – னால் நாடாளுமன்ற மேலவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முற்போக்கு சம்பள கொள்கை என்பது பணியாளர்களுக்கு அமல்படுத்தப்பட்டுள்ள குறைந்த பட்ச சம்பளமான 1,500 வெள்ளியிலிருந்து கட்டம் கட்டமாக உயர்த்துவதற்கு வகை செய்கிறது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நிகராக தொழிலாளர்களின் சம்பள முறை இருப்பதை இந்த வெள்ளை அறிக்கை உறுதி செய்கிறது.

Related News