கோவிட் 19 நோய் தொற்று பரவலினால் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்துள்ள மலேசிய இந்திய வியாபாரிகள், தீபாவளி போன்ற விழா காலங்களில்தான் சிறிது வர்த்தகத்தை எதிர்பார்க்க முடியும்.
அத்தகைய கொஞ்ச நஞ்சம் வியாபார வாய்ப்புகளையும் , அந்நிய நாட்டு வியாபாரிகளின் வரவினால் தட்டிப் பறிக்கப்பட்டு வருவதாக மலேசிய சிறுவர்த்தகர்களின் குரலாக விளங்கும் திருமதி கலா பாலமுரளி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒட்டுமொத்த மலேசிய இந்திய வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கச்செய்யக்கூடிய அந்நிய வியாபாரிகளின் வருகையை அரசாங்கம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். அதேவேளையில் EXPO என்ற பெயரில் தீபாவளி சந்தையில் ஊடுருவியுள்ள அந்நிய நாட்டு வியாபாரிகள் களையெடுக்கப்பட வேண்டும்.
இல்லையேல். மலேசிய இந்திய வியாபாரிகள் பெரும் இழப்பை எதிர்நோக்கக்கூடும் என்று ஜவுளி வியாபார வர்த்தகரும், மலேசிய இந்து ஆகம அணியின் துணைத் தலைவருமான திருமதி கலா பாலமுரளி தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார். .








