ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.24-
ஜோகூரில் இன்று ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து, அப்பகுதி Mersing Fault Zone அதாவது, மெர்சிங் பிளவு மண்டலம் என்ற புவிப் பிளவு மண்டலத்தில் நிகழ்ந்தவை என மலேசிய வானிலை ஆய்வுத் துறை மேட்மலேசியா உறுதிப்படுத்தியுள்ளது.
முதல் நிலநடுக்கம், அதிகாலை 6.13 மணியளவில் செகாமட்டில் ரிக்டர் அளவில் 4.1-ஆகப் பதிவானது. அதைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் யோங் பெங் பகுதியில் 2.8 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதிர்வுகள், ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங் ஆகிய மாநிலங்களிலும் உணரப்பட்டன.








