கோலாலம்பூர், அக்டோபர்.12-
பிஎல்கேஎன் எனப்படும் தேசிய சேவைப் பயிற்சித் திட்டம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கட்டாய இணைப்பாடத் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
முதற்கட்டமாக, சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தில் இத்திட்டம் முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என தேசிய சேவைப் பயிற்சித் துறையின் தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் (B) டத்தோ யாகோப் சமிரான் தெரிவித்துள்ளார்.
இதற்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 250 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பயிற்சியின் மூலம் இராணுவ, தேச நலன் சார்ந்த திறன்களை மாணவர்கள் பெறுவர்.
இந்தத் திட்டம் 2027-ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும், இது நாட்டின் ஒற்றுமையையும் தேசபக்தியையும் வலுப்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.








