Jun 19, 2026
Thisaigal NewsYouTube
மாநில தேர்தல்களுக்கான 99 சதவிகித பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயார்  / புதிய முகங்கள், பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

மாநில தேர்தல்களுக்கான 99 சதவிகித பிகேஆர் வேட்பாளர் பட்டியல் தயார் / புதிய முகங்கள், பெண்கள், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

Share:

ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான பிகேஆர் வேட்பாளர் பட்டியல் 99 சதவீதம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் புசியா சாலே அறிவித்துள்ளார்.

ஜோகூரில் 20 வேட்பாளர்களையும், நெகிரி செம்பிலானில் 16 வேட்பாளர்களின் களமிறக்குவதற்கு கட்சி திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

99 சதவிகிதம் உறுதிசெய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலானது இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் புசியா சாலே குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேட்பாளர் பட்டியலில் அனுபவமிக்க தலைவர்கள், புதிய முகங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் ஆகியோருக்கு சமநிலையான இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பு, இரு மாநிலங்களிலும் எத்தனை சதவீத புதிய முகங்கள் களமிறக்கப்பட உள்ளன என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அதேவேளையில், ஜோகூரில் புத்ரி வாங்சா தொகுதியை ஜோகூர் அமனா கட்சி கோரியிருந்தாலும், அந்த விவகாரம் கூட்டணியின் உயர்மட்டத் தலைமையில் தீர்வு காணப்பட வேண்டிய விவகாரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமனாவின் கோரிக்கை தொடர்பில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் கூட்டணியின் உயர்மட்டத்தில் ஏற்கனவே முடிவுக்கு கொண்டு வரப்பட்டுவிட்டதாகவும் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவீன துணை அமைச்சருமான டாக்டர் புசியா சாலே தெரிவித்துள்ளார்.

Related News

பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு

பண்டார் சுன்சூரியா அடுக்குமாடிக் குடியிருப்பில் வெளிநாட்டுப் பெண்ணைக் கொலை செய்ததாக உள்ளூர் பெண் மீது குற்றச்சாட்டு

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

தேர்தல்களில் 30 விழுக்காடு பெண்களை களமிறக்கும் சட்டத்திற்கு அமனா ஆதரவு

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

நீதிமன்ற வளாக போலீஸ் அறையில் போதைப்பொருள் வைத்திருந்ததாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

மலேசியாவுக்கு நீண்டகால பெட்ரோல், எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்க ரஷ்யா ஒப்புதல்

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

யுஎம் பேராசிரியர் மீதான பாலியல் புகார் - விசாரணை அறிக்கையை பொதுவில் வெளியிட மாணவர் அமைப்பு வலியுறுத்து

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்

தும்பாட்டில் 15 வயது சிறுமி பலமாகத் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்