Nov 12, 2025
Thisaigal NewsYouTube
கள்ளத் தோணி கவிழ்ந்த சம்பவம்: மரண எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது
தற்போதைய செய்திகள்

கள்ளத் தோணி கவிழ்ந்த சம்பவம்: மரண எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது

Share:

லங்காவி, நவம்பர்.12-

மலேசிய – தாய்லாந்து எல்லைக்கு அருகில் லங்காவி கடற்பகுதியில் கள்ளத் தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கிய சம்பவத்தில் இதுவரை மரண எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடும் நடவடிக்கையில் மேலும் இரண்டு உடல்கள் இன்று மீட்கப்பட்டன என்று கெடா – பெர்லிஸ் கடல்சார் அமலாக்க நிறுவனத்தின் இயக்குநர் ரம்லி முஸ்தாபா தெரிவித்தார்.

இன்று காலை 10.10 மணியளவில் பூலாவ் சிங்கா பெசார் என்ற இடத்தில் ஒரு சடலம் மீட்கப்பட்டது. பூலாவ் அனாக் டாதாய் அருகில் செலாட் சின்சின் என்ற இடத்தில் மற்றொரு சடலம் மீட்கப்பட்டதாக ரம்லி குறிப்பிட்டார்.

கள்ளத் தோணி கவிழ்ந்த சம்பவத்தில் இதுவரை 14 பேர் உயிர் பிழைத்து இருப்பதாக அவர் விளக்கினார்.

Related News