பேரா, பசிர் சாலாக், கம்போங் காஜா அருகில் மத்திய பேரா அரசு நிர்வாக கட்டட வளாகத்தில் பாதுகாவலர் சாவடியில் பத்து மாத கைக்குழந்தை உட்பட நான்கு சிறார்கள் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். உடன்பிறப்புகள் என்று நம்பப்படும் அந்த நான்கு சிறார்களும் நேற்று காலை 10.50 மணியளவில் அந்த பாதுகாவலர் சாவடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
11 வயது சிறுவன், ஆறு வயது சிறுமி, 3 வயது சிறுவன் மற்றும் பத்து மாத ஆண் குழந்தை ஆகியோர் கைவிடப்பட்ட நிலையில் கிடந்தது குறித்து மாலை 5.39 மணியளவில் மாவட்ட சமூக நல இலாகா மூலம் தெரியவந்துள்ளதாக மத்திய பேரா மாவட்ட போலீஸ் தலைவர் சுபெரிதென்டன் ஹஃபெசுல் ஹெல்மி தெரிவித்தார்.
தொயோத்தா ரக காரில் வந்த மாது ஒருவர், அந்தப் பிள்ளைகளை அவ்விடத்தில் இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து தாங்கள் தீவிர விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.








