Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆம்புலன்ஸ் தடம் புரண்டது, மருத்துவ உதவியாளர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆம்புலன்ஸ் தடம் புரண்டது, மருத்துவ உதவியாளர் காயம்

மலாக்கா, ஜூன்.20-

ஆம்புலன்ஸ் ஒன்று, சாலையை விட்டு விலகி, இரும்புத் தடுப்பில் மோதி தடம் புரண்டதில் மருத்துவ உதவியாளர் ஒருவர் காயமுற்றார். இந்தச் சம்பவம் இன்று காலை 10.45 மணியளவில் மலாக்கா, தங்கா பத்து, கம்போங் லாயா லுபோ என்ற இடத்தில் நிகழ்ந்தது.

இதில் 30 வயது மதிக்கத்தக்க மருத்துவ உதவியாளர் காயமுற்றார். 40 வயது ஓட்டுநர் காயமின்றி உயிர்த் தப்பியதாக தங்கா பத்து தீயணைப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் முகமட் அஸுவானி மாட் யுசோஃப் தெரிவித்தார்.

காயமுற்ற மருத்துவ உதவியாளர், மற்றோர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். நோயாளி ஒருவரைக் கொண்டு வருவதற்காக சைரன் ஒலியுடன் அந்த ஆம்புலன்ஸ் வண்டி வேகமாகச் சென்று கொண்டிருந்த போது சாலை வளைவில் இரும்புத் தடுப்பை மோதிக் கவிழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →