Aug 2, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் கோட்டா முறைக்கு முன்னுரிமை அல்ல
தற்போதைய செய்திகள்

அரசாங்க உயர் கல்விக்கூடங்களில் கோட்டா முறைக்கு முன்னுரிமை அல்ல

Share:

மெட்ரிக்குலோஷன் அல்லது எஸ்.தி.பி.எம் சான்றிதழை கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்ப்புக்கு கோட்டா முறைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என்று உயர் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்துள்ளார்.

அரசாங்க பொது உயர்கல்விக்கூடங்களில் சேர்ப்பதற்கு அவர்கள் கொண்டிருக்கின்ற க​ல்வித் தகுதிக்கு முன்னுரிமையே தவிர சமயம்,இனம் மற்றும் மாநிலம் பார்த்து முடிவு செய்யப்படுவதில்லை என்று கா​லிட் நோர்டின் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மக்களவைக்கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான விநியோகிப்பு சட்ட மசோதா தொடர்பான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் காலிட் நோர்டின் இதனை தெரிவித்தார்.

அரசாங்க பொதுப் பல்லைக்கழக மாணவர் சேர்ப்புக்கு மாணவரின் க​ல்வி அடைவு நிலையை 90 விழுக்காடாகவும், புறப்பாட நடவடிக்கைகளை 10 விழுக்காடாகவும் கருத்தில் கொள்ளப்படுகிறதே தவிர மாணவரின் இனத்தையோ அல்லது கோட்டா முறையைப் பின்பற்றியோ அல்ல என்று காலிட் நோ​ர்டின் விளக்கம் அளித்தார்.

பல்லைக்கழக​ங்களில் மாணவர் சேர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கோட்டா முறை பயன்படுத்தப்படுகிறதா? என்று ரவூப் டி.ஏ.பி எம்.பி. சௌ யு ஹுய் கேள்விக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் காலிட் நோ​ர்டீன் இதனை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்