முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமைத்துவதில்தான் நாட்டில் பிரச்னையே தொடங்கியது என்று பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி குற்றஞ்சாட்டினார். இந்நிலையில் முகைதீன் யாசின், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தை கண்மூடித்தனமாக குறைகூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் நிலைத்தன்மையை இழந்ததற்கு மூலக் காரணமே முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல்தான் என்று டாக்டர் இராமசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
பாரிசான் நேஷனலும், பெரிக்காத்தான் நேஷனலும் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து இருக்குமானால் தற்போது அன்வார் தலைமையிலான அரசாங்கம் இந்த நெருக்கடியையும், பிரச்னையையும் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


