மேன்மை தங்கிய பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா வின் 64 ஆவது பிறந்ததின விழாவையொட்டி இன்று குவந்தான், அபு பக்கார் அரண்மனை ரில் 104 பிரமுகர்களுக்கு பல்வேறு உயரிய விருதுகளும், பட்டங்களும் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
உயரிய விருது பெற்றவர்களில் கோலாலம்பூர் செந்தூல் மாவட்ட முன்னாள் போலீஸ் தலைவரும், புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறையின் உளவு, செயலாக்கம் மற்றும் பதிவுப்பிரிவின் தலைமை உதவி இயக்குநர் முதிர் நிலை உதவி கமிஷனர் எஸ். சண்முகமூர்த்தி சின்னையா வும் ஒருவர் ஆவார்.
சண்முகமூர்த்திக்கு “டத்தோ” அந்தஸ்தை தாங்கிய டார்ஜா இந்ரா மக்கோத்தா பஹாங் எனும் டி.ஐ. எம்.பி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பங்சாரில் பிறந்து வளர்ந்த ஒரு சட்ட வல்லுநருமான சண்முகமூர்த்தி, கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதி கோலாலம்பூர், செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு 2 ஆண்டு காலம் சிறப்பான சேவையை வழங்கியவர் ஆவார். 2 ஆண்டு கால சேவைக்கு பின்னர் அவர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். உக்ரெயின் வான் போக்குவரத்துப்பாதையில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான MH 17 விமானப் பேரிடர் புலன் விசாரணையிலும் தமது சட்ட நிபுணத்துவத்தை சண்முகமூர்த்தி வழங்கியர் ஆவார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


