குளுவாங், ஆகஸ்ட்.02-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி தடம் புரண்டதில் தொழிற்சாலைப் பணியாளர் ஒருவர் மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் ஜோகூர், குளுவாங், ஜாலான் ஜோகூர் பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 76 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
இதில் 32 வயது கமாருஸாமான் குசின் என்பவர் கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் நிக் முகமட் அஸ்மி ஹுசேன் தெரிவித்தார்.








