டிஏபி தோற்றுநர்களில் ஒருவரும், சிரம்பான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் ஃபெர்னென்டஸ் காலாமனார். அவருக்கு வயது 82. மூப்பின் காரணமாக தமது தந்தை மரணம் அடைந்ததைத் அவரின் மகன் இவான் உறுதி செய்தார்.
கடந்த 1966 ஆம் ஆண்டு டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், காலஞ்ங்சென்ற தேவன் நாயர் மற்றும் இதர முக்கியத் தலைவர்களுடன் டிஏபியை தோற்றுவித்த முக்கியத் தலைவர்களில்ஜோன் ஃபெர்னென்டஸ் சும் ஒருவர் ஆவர்.
காலஞ்சென்ற ஜோன் ஃபெர்னென்டஸ் கடந்த 1974 ஆம் ஆண்டு தேசிய முன்னணி, உதயமாகி, சந்தித்த முதலாவது தேர்தலில் சிரம்பான்,ராசா சட்டமன்றத் தொகுதியில் டிஏபி சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, 1978 ஆம் ஆண்டு வரையில் ஒரு தவணை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.
டிஏபி தலைமைத்துவத்தின் மீது கொண்டிருந்த கருத்து வேறுபாட்டினால் ஜோன் ஃபெர்னென்டஸ் 1980 ஆம் ஆண்டில் கட்சியை விட்டு விட்டு வெளியேறினார். 18 ஆண்டுகளுக்கு பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து, 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டிஏபி சார்பில் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஜோன் ஃபெர்னென்டஸ் வெற்றி பெற்றார்.
2013 ஆம் ஆண்டு மீண்டும் கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு வழக்கறிஞரான ஜோன் ஃபெர்னென்டஸ் , மீண்டும் சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்விக் கண்டார்.








