Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஸாராவின் மரண விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஸாராவின் மரண விசாரணை செப்டம்பர் 3 ஆம் தேதி தொடங்குகிறது

Share:

கோத்தா கினபாலு, ஆகஸ்ட்.18-

முதலாம் படிவ மாணவி ஸாரா கைரினா மகாதீர் இறப்பு தொடர்பான மரண விசாரணை வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி சபா, கோத்தா கினபாலு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடங்குகிறது.

ஸாராவின் மரணம் தொடர்பான விசாரணை தேதிகளை நிர்ணயிக்க இவ்வழக்கு இன்று திங்கட்கிழமை கோத்தா கினபாலு, மரண விசாரணை நீதிபதி அஸ்ரீனா அஸிஸ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த வழக்கில் ஸாராவின் 45 வயது தாயார் நோராய்டா லாமாட் சார்பில் வழக்கறிஞர் ஹாமிட் இஸ்மாயில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஜுலை 16 ஆம் தேதி சபா, பாபார், துன் டத்து முஸ்தபா சமய இலைநிலைப்பள்ளியின் ஹாஸ்டல் கட்டடத்தில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் மரணம் அடைந்த ஸாரா இறப்பு தொடர்பாக அரச மலேசிய போலீஸ் படை நடத்திய புலன் விசாரணையின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த மரண விசாரணை நடைபெறுகிறது.

சம்பந்தப்பட்ட மாணவியின் இறப்பு திடீர் மரணம் என்று போலீசார் முதலில் வகைப்படுத்தினர். எனினும் அந்த மாணவியின் உடலில் இரண்டாவது முறையாக நடத்தப்பட்ட சவப் பரிசோதனை முடிவில் அவரின் உடலில் அடிப்பட்ட தழும்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்கள் அதிகளவில் திரண்டிருந்தனர்.

Related News