கோலாலம்பூர், அக்டோபர்.19-
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 தரவரிசையில் அமெரிக்கப் பாஸ்போர்ட்டுக்கு இணையாக, மலேசியக் கடப்பிதழ் உலக அளவில் 12வது இடத்தைப் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது. இச்சாதனையால், மலேசியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் இனி உலகின் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மலேசியாவின் பயண ஆவணத்தின் மீதும், அதன் பாதுகாப்புத் தரம் மீதும் உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கையையும், உறுதியான அங்கீகாரத்தையும் இது பிரதிபலிக்கிறது என்று மலேசியக் குடிநுழைவுத் துறை (JIM) பெருமிதம் தெரிவித்துள்ளது.