கோலாலம்பூர், டிசம்பர்.15-
புதிய லைசென்ஸ் முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி எடுத்துள்ள நடவடிக்கைகளை போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் வரவேற்றுள்ளார்.
நாட்டின் இலக்கவில் மற்றும் ஓன் லைன் பயன்பாட்டில் பாதுகாப்புத் தன்மையை மேம்படுத்துவதற்கு இந்த புதிய வழிகாட்டல் மற்றும் நிபந்தனைகள் பெரிதும் உதவும் என்று ஐஜிபி வர்ணித்துள்ளார்.
மலேசியாவில் செயல்பாட்டில் உள்ள இலக்கவியல் தளங்களின் நிர்வாக முறைகளை மேம்படுத்துவதற்கு எம்சிஎம்சி எடுத்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் உண்மையிலேயே பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதற்கு வரவேற்கத்தக்கதாகும் என்று டான் ஶ்ரீ முஹமட் காலிட் தெரிவித்துள்ளார்.








