ஜகார்த்தா, ஜனவரி.08-
இந்தோனேசியா நாட்டின் ரங்சாங் தீவிலுள்ள துறைமுகம் ஒன்றில், சடலமாக மீட்கப்பட்ட மலேசியரின் மரணம் குறித்து அந்நாட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக, அப்பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக மெராந்தி தீவுகளின் போலீஸ் தலைவர் Aldi Alfa Faroqi தெரிவித்துள்ளார்.
இந்த மரணம் சம்பவம் தொடர்பில், குற்றச் செயல்கள் ஏதும் உள்ளதா? என்பதைப் போலீசார் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவர் 2-ஆம் தேதி, காலை 11 மணியளவில், துறைமுகத்தில் சடலம் ஒன்றைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
முதலில், உள்ளூர்வாசியாகக் கருதப்பட்ட அந்நபர், முதற்கட்ட விசாரணைக்குப் பின்னரே மலேசியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தே கோக் கியோங் என்ற அந்த 33 வயதான மலேசியர் Tower Transit என்ற நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், மலேசியாவிலுள்ள தே கோக்கின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள இந்தோனேசிய போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.








