May 7, 2026
Thisaigal NewsYouTube
60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம்: சீனப் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடும் 'நெருப்புக் குதிரை‘
தற்போதைய செய்திகள்

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வம்: சீனப் புத்தாண்டை குதூகலமாகக் கொண்டாடும் 'நெருப்புக் குதிரை‘

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.16-

நாளை செவ்வாய்க்கிழமை சீனப் புத்தாண்டு உலகெங்கும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சீனப் புத்தாண்டின் 12 விலங்குகள் வரிசையில், இந்த 2026-ஆம் ஆண்டு 'நெருப்புக் குதிரை' ஆண்டாக மலர்கிறது. இது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த ஆண்டு என்பதால், சீன மக்கள் வழக்கத்திற்கு மாறாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இம்முறை மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாட்டங்களை முன்னெடுத்து வருவதாக சீனச் சமுதாயத்தினர் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

சீனப் பண்பாட்டில் குதிரை என்பது வேகம், வெற்றி மற்றும் தளராத விடாமுயற்சியின் அடையாளமாகும். இந்த நெருப்பு அம்சம் கொண்ட குதிரையின் நேர்மறை ஆற்றல், குடும்பத்தில் அளவற்ற மகிழ்ச்சியையும், தொழிலில் அசுர வளர்ச்சியையும் அள்ளித் தரும் என்பது சீனர்களின் ஆழமான நம்பிக்கை. குறிப்பாக, "குதிரை வந்தாலே வெற்றி நிச்சயம்" என்ற அவர்களது பழமொழிக்கேற்ப, இந்த ஆண்டில் எடுக்கப்படும் துணிச்சலான முடிவுகள் பெரிய முன்னேற்றத்தைத் தரும் என்பது சீன சமூகத்தின் ஐதீகமாகும்.

அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த நெருப்புக் குதிரை ஆண்டைத் தங்கள் வாழ்நாளில் காண்பதை, சீன மக்கள் ஒரு பெரும் பாக்கியமாகக் கருதுகின்றனர்.

Related News

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

முதியவரை வெட்டிக்கொன்று விட்டு கொள்ளையடித்ததாக நான்கு இந்திய இளைஞர்கள் மீது கொலை குற்றச்சாட்டு

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது