May 24, 2026
Thisaigal NewsYouTube
யாப் ஆ லோய் சாலை, பாலஸ்தின் சாலையாக மாற்றப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

யாப் ஆ லோய் சாலை, பாலஸ்தின் சாலையாக மாற்றப்பட்டதா?

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

நவீன கோலாலம்பூரை நிறுவி, அதன் வளர்ச்சியில் இரண்டரறக் கலந்தவரான யாப் ஆ லோய்- யின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில் கோலாலம்பூரில் அவரின் பெயரில் சூட்டப்பட்டுள்ள சாலையின் பெயர் ஜாலான் பாலஸ்தீன் என மாற்றப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலை DAP தலைவர் ஒருவர் மறுத்துள்ளார்.

ஜாலான் யாப் லாய் சாலை, ஜாலான் பாலஸ்தீன் என மாற்றப்பட்டு இருப்பதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானதாகும் என்று DAP-யை சேர்ந்த பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்சயரெட்சன் ஜோஹன் விளக்கம் அளித்துள்ளார்.

கோலாலம்பூர் மாநகரின் நில அடையாளத்தை தாங்கிய முக்கியப் பகுதிகளில் ஒன்றான ஜாலான் ராஜா லௌட் 1 சாலைக்கு பதிலாகஜாலான் பாலஸ்தீன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

ஆனால், ஜாலான் யாப் லாய் சாலை, ஜாலான் பாலஸ்தீன் என தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுவது வேண்டுமென்றே கட்டவிழ்க்கப்பட்டுள்ள புரளியாகும் என்று அந்த எம்.பி. விளக்கம் தந்துள்ளார்.

Related News