Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திரம்: அதிரடிப் பாய்ச்சலில் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு!
தற்போதைய செய்திகள்

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் தந்திரம்: அதிரடிப் பாய்ச்சலில் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

சாரா உதவித் திட்டம் வாயிலாகவும் ‘மைகாசே’ திட்டங்கள் மூலமாகவும் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் திடீரென அதிகரித்துள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சுக்கு இரண்டு புகார்கள் கிடைத்துள்ளன. இஃது ஒரு தொழில்நுட்பக் கோளாறு என்று கூறப்பட்டாலும், வணிகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக ஆதாயம் ஈட்ட முயற்சிக்கிறார்களா என அமைச்சு சந்தேகித்துள்ளது.

எந்தவொரு வர்த்தகரும் விலையை நியாயமற்ற முறையில் உயர்த்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் தலைமைச் செயலாளர் முகமட் சயுதி பாக்கார் எச்சரித்துள்ளார். ஏழைகளுக்கு உதவ உருவாக்கப்பட்ட திட்டங்களில் ஆதாயம் ஈட்ட நினைக்கும் பேராசை கொண்ட வணிகர்களைக் கண்காணிக்க, அதிகாரிகள் குழு ஒன்று களமிறங்கியுள்ளது.

Related News