கோலாலம்பூர், அக்டோபர்.18-
வரும் திங்கட்கிழமை இந்திய சமூகம் தீபாவளி திருநாளைக் கொண்டாடும் வேளையில் நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி பலர் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வாகனங்களின் கூடுதல் எண்ணிக்கை காரணமாக சுங்கை புலோவிலிருந்து ரவாங் வரையிலும், பண்டார் காசியாவிலிருந்து புக்கிட் தம்புன் வரையிலும் வாகனங்கள் மெதுவாக நகர்கின்றன என்று எல்எல்எம் எனப்படும் மலேசிய நெடுஞ்சாலை வாரியம் தெரிவித்துள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை, தீபாவளித் திருநாளையொட்டி பிரதான நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தில் 50 விழுக்காடு வரை தள்ளுபடி செய்யப்படுவதால் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நெடுஞ்சாலை வாரியம் அறிவித்துள்ளது.