Dec 4, 2025
Thisaigal NewsYouTube
3 முறை நில நடுக்கம்: பீதியில் மூழ்கினர் சிகாமட் மக்கள்
தற்போதைய செய்திகள்

3 முறை நில நடுக்கம்: பீதியில் மூழ்கினர் சிகாமட் மக்கள்

Share:

சிகாமட், ஆகஸ்ட்.29-

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 6 நாட்களில் மூன்று முறை நில நடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து ஜோகூர், சிகாமட் மக்கள தற்போது பீதியில் மூழ்கியுள்ளனர்.

மூன்று முறை ஏற்பட்ட நில நடுக்கம் மிதமானதாக இருந்ததால் எந்தவொரு சேதத்தையும் தாங்கள் எதிர்கொள்ளவில்லை என்றாலும் எதிர்காலத்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டால் தங்கள் நிலை என்னவாகும் என்று அவர்கள் அச்சத்துடன் வினவியுள்ளனர்.

ஆகக் கடைசியாக, சிகாமட்டில் இன்று விடியற்காலையில் மீண்டும் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்நது அவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் பதிவுச் செய்யப்பட்டது.
இந்த நில நடுக்கம் சிகாமட் நகரிலிருந்து வட கிழக்காக 22 கிலோமீட்டர் தூரத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா அறிவித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தாம் உணர்ந்ததாக சிகாமட்வாசி முகமட் ஜொஹான் ஹசான் தெரிவித்தார். தாம் காலைத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தாம் அமர்ந்திருந்த இடம் குலுங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

தம்மைப் போலவே சிகாமட் மக்கள் தற்போது மிகுந்த அச்சத்தில் இருப்பதால், இது போன்ற சாத்தியத்தை எதிர்கொள்ளும் போது ஆபத்து அவசர வேளைகளில் தாங்கள் கையாள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related News