Oct 16, 2026
Thisaigal NewsYouTube

7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஐவர் காயம்

வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, 274.9 ஆவது கிலோ மீட்டரில் பண்டார் ஆய்ன்டேலிருந்து நீலாய்யை நோக்கி செல்லும் சாலையில் இன்று காலையில் 7 வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இருவர் படுகாயம் அடைந்ததுடன், மேலும் மூவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகினர்.

காலை 6.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் தம்பினிலிருந்து காஜாங்கை நோக்கி 60 வயது உதவியாளருடன் 74 வயது ஓட்டநர் செலுத்திய டையாட்சு ரக லோரி வேக கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை மோதித்தள்ளியதாக நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட லோரி, ஐந்து கார்களையும், ஒரு லோரியையும் மோதித்தள்ளியதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹஷிம் தெரிவித்தார்.

இதில் பெரோடுவா அட்வி ரக காரில் பயணித்த அதன் ஓட்டுநரும் பயணியும் கடும் காயங்களக்கு ஆளாகினர். அவர்கள் சிரம்பான், துவாங்கு ஜப்பார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரோடுவா மைவியில் பயணம் செய்த இருவர் மற்றும் Daihatsu ரக லோரி உதவியாளர் ஆகியோர் சொற்ப காயங்களுக்கு ஆளாகியதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →