தெலுக் இந்தான், ஆகஸ்ட்.08-
தெலுக் இந்தான், பாடாங் ஸ்பீடி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் போலீசார் 7 ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.
21 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த 7 பேரும் கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் தெரிவித்தார்.
இரு கால்பந்தாட்ட அணிகளுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டுள்ளதாக ஆடவரிடமிருந்து கிடைக்கப் பெற்றப் புகாரைத் தொடர்ந்து ரோந்துப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக டாக்டர் பக்ரி குறிப்பிட்டார்.








