சரவாக், கூச்சிங், பத்து காவா பகுதியில் ஐந்து வீடுகள் தீயில் அழிந்ததில் ஆறு வயது சிறுவன் கருகி மாண்டான். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 3.33 மணியளவில் நிகழ்ந்தது. ஷய்யான் நசீம் சைனால் என்ற அந்த சிறுவன், அந்த வீடுகளில் ஒன்றில் மேல்மாடியிலிருந்து தப்பிக்க இயலாமல் கருகி மாண்டதாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் ஐந்து வீடுகள் அழிந்த வேளையில் 18 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர், முழு வீச்சில் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததால் மற்ற வீடுகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டதாக தீயணைப்புப்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


