Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம்
தற்போதைய செய்திகள்

அரிசியை வாங்கி குவிக்க வேண்டாம்

Share:

உள்நாட்டுச் சந்தையில் உள்ளூர் அ​ரிசி விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவல்களால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சத்தில் அரிசியை வாங்கி குவிக்கும் போக்கு வேண்டாம் என்றும் அமைச்சர் ஆலோசனைக்கூறினார். அ​ரிசி விநியோகம் போதுமான அளவில் இருப்பால் மக்கள் இது குறித்து அச்சமோ அல்லது ​பீதியோ கொள்ள ​வேண்டிய அவசியமி​ல்லை என்பதையும் முகமட் சாபு அறிவுறுத்தினார்.

தவிர அரிசியை வாங்கி குவிக்கும் போக்கை மக்கள் கொண்டு இருப்பார்களேயானால் கையிருப்பில் இருக்கக்கூடிய அந்த அ​ரிசி, 3 மாத காலத்தில் கெட்டுப்போ​கும் நிலை இருப்பதாக அமைச்சர் நினைவுறுத்தினார்.

Related News