Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இமயம் சங்க பிரதிநிதிகள் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இமயம் சங்க பிரதிநிதிகள் தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பு

புத்ராஜெயா, ஜூன்.11-

புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கமான ‘இமயம்’ பிரதிநிதிகள், அதன் தலைவர் டாக்டர் சதீஸ்குமார் கே. முத்துசாமி தலைமையில், தொடர்பு துணையமைச்சர் தியோ நி சிங்கை மரியாதை நிமித்தமாக அலுவலகத்தில் சந்தித்தனர்.

புத்ராஜெயா மற்றும் சைபர்ஜெயாவில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட இந்திய அரசு ஊழியர்கள் இமயம் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு ஒற்றுமை, சிறந்த தொழில்முறை ஆக்கப்பூர்வம் மற்றும் அரசு ஊழியர்களின் நலனை வலுப்படுத்தும் நோக்கில் பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சந்திப்பின் போது, தங்கள் உறுப்பினர்களை நாடு தழுவிய அளவில் விரிவுபடுத்தும் திட்டத்தையும், சமூக மாற்றத்திற்கான பல முயற்சிகளைச் செயல்படுத்தும் திட்டங்களையும் இமயம் குழு வெளிப்படுத்தியது. மேலும், அரசு நிறுவனங்களுடனான ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்த இவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

“இது போன்ற சிறந்த முயற்சிகளை எப்போதும் நான் வரவேற்கிறேன். எனது நாடாளுமன்றத் தொகுதியான கூலாயில் அரசாங்க வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், ஆர்.டி.எம்-இன் மின்னல் எஃப்.எம் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் தகவல்களை மக்களுக்கு விரிவாகக் கொண்டு சேர்க்க வேண்டும்” என துணையமைச்சர் தியோ நி சிங் வலியுறுத்தினார்.

இமயம் குழுவின் சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பையும், முயற்சியையும் பாராட்டிய தியோ நி சிங், “இந்த முயற்சிகள் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள் பொதுச் சேவைத் துறையில் சேர ஊக்குவிக்கும் மற்றும் நாட்டிற்கு பங்களிக்க வழிகாட்ட உதவும்” என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு