Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இந்த நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் சையத் சாதிக் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை திரட்டியுள்ளார்.
தற்போதைய செய்திகள்

இந்த நெடுந்தூர ஓட்டத்தின் மூலம் சையத் சாதிக் ஒரு லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியை திரட்டியுள்ளார்.

Share:

கோலாலம்பூர், ஜுலை 01-

சுமார் 200 கிலோமீட்டர் தூரம், தனியொரு நபராக நெடுந்தூர ஓட்டத்தை மேற்கொண்ட மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் மூவார் எம்.பி.யுமான சையத் சாதிக் சைர்ட் அப்துல் ரஹ்மான், இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு தனது நெடுந்தூரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜோகூர், மூவார் பாலத்திலிருந்து தனது நெடுந்தூர ஓடடத்தை தொடக்கிய சையத் சாதிக் - கின் நான்கு நாள் ஓட்டுத்திற்குப் பின்னர் இன்று காலை 9.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள மலேசிய நாடாளுமன்றக் கட்டடத்தை வந்தடைந்தார்.

தொகுதி மக்களுக்கு சேவையாற்றுவதற்கு ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுக்கு தலா 40 லட்சம் வெள்ளி வீதம் 5 வருடத்திற்கு 2 கோடி வெள்ளி மானிய ஒதுக்கீடு, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கும் வகையில் சையத் சாதிக் இந்த நெடுந்தூரத்தை தொடக்கினார்.

அதேவேளையில் தனது மூவார் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் சேவை மையம் செயல்படுவதற்கு ஒரு லட்சம் வெள்ளியை திரட்டும் நோக்கிலும் சையத் சாதிக் தனியொரு நபராக இந்த நெடுந்தூர ஓட்டத்தை முன்னெடுத்தார்.

நாடாளுமனற கட்டடத்தை வந்தடைந்த சையத் சாதிக் - கிற்கு அவரின் ஆதரவாளர்கள் மலேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் – கை போர்த்தி வரவேற்றனர்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்