சிபு, செப்டம்பர்.26-
வேனும், Four Wheel Drive வாகனம் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இதர ஒன்பது பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம், இன்று முற்பகல் 11.50 மணியளவில் சிபு, பான் போர்னியோ நெடுஞ்சாலையில் பெதோங், கிளினிக் ஸ்கிராங் அருகில் நிகழ்ந்தது.
உயிரிழந்த இரு ஆண்களும், வேனில் பயணித்த எட்டு பேரில் அடங்குவர் என்று சரவாக் மாநில தீயணைப்பு, மீட்புப்படை செயலாக்க மையம் தெரிவித்தது. வேனில் பயணித்தவர்களில் அறுவரும், Land Cruiser ரக Four Wheel Drive வாகனத்தில் பயணித்த மூவரும் இதில் காயமடைந்தனர்.
இதில் கடுங் காயங்களுக்கு ஆளான அறுவர் பெதோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த மையம் தெரிவித்தது.








