Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு, லோரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுச் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டு, லோரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுச் சிறை

கிள்ளான், ஜூன்.19-

தனது பத்து வயது மகளைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் ஒருவருக்கு கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

அத்துடன் அந்த நபருக்கு 20 பிரம்படித் தண்டனையை விதிக்குமாறு உத்தரவிட்டது.

37 வயதுடைய அந்த நபர், தனது 20 ஆண்டு சிறைத் தண்டனையை நிறைவேற்றிய பின்னர் அவருக்கு 2 ஆண்டுகளுக்கு நல்லுரை வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி சித்தி அமினா கஸாலி உத்தரவிட்டார்.

முன்னதாக, தனது கருணை மனுவில், தனது செயலுக்காக வருந்துவதாகவும், தனக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் தண்டனையைக் குறைக்குமாறு அந்த லோரி ஓட்டுநர், நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →